skip to Main Content

வவுனியா நகரத்தில் ஒரு நல்ல தரமான பாலர் பாடசாலை இல்லாத குறையைப் போக்கும் முகமாக இச்சங்கம் ஒரு பாலர் பாடசாலையை நடாத்திவருகின்றது. சுமார் நூற்ரறுஐம்பது(150)  பிள்ளைகள் வரை கல்விபயின்று வருகிறார்கள். ஏழு ஆசிரியர்கள் சேவையாற்றுகிறார்கள். இப்பாடசாலை வவுனியாவில் ஒரு முதற்தரமான பாடசாலை என்ற பெயரைப் பெற்றுள்ளது.

இல முன்பள்ளி மாணவர் விபரம்  ஆண்  பெண் மொத்தம்
1 மேல்பிரிவு (2021 பாடசாலை செல்வோர்) 37 46 83
2 கீழ்பிரிவு 38 38 76
மொத்த மாணவர் எண்ணிக்கை  75 84 159

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கபாலர் பாடசாலை கையேடு.

சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம்- வவுனியாதனதுசமூகசேவையின் ஒருஅங்கமாக பாலர் பாடசாலையினை நடாத்திவருகிறது.  இப்பாடசாலையானது NP/PS/V/VS/VA-020 பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இப் பாலர் பாடசாலையானது முழுமையாக சங்க ஆட்சிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ்நடைமுறைப்படுத்தப்படும்.

இப் பாலர் பாடசாலையினை நிர்வகிப்பதற்கென ஒருஅதிபரும்  மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களும் ஒரு பணியாளரும் கடமையாற்றுவார்கள்.

பாலர்களின் திறன் விருத்திக்கென விளையாட்டுப்போட்டி,மற்றும் கலைகலாச்சாரநிகழ்வுகளைநடாத்தும்.

சகலநிகழ்வுகளும் இந்துசமயகோட்பாடுகளுக்குஅமைவாகவும் சங்கயாப்புவிதிகளுக்கமைவாகவும் நடாத்தப்படவேண்டும்.

ஏனைய இன மதநிகழ்வுகளைநாடாத்தமுடியாது. ஆனால் எனைய இனமதபாலகர்கள் விரும்பின் கல்வி பயிலமுடியும்.

பாடசாலையினைநிர்வகிப்பதற்கெனபெற்றோரிடம் இருந்துபதிவுக் கட்டணம்,தவணைக்கட்டணம் என்பனஅறவிடப்படும்.

விளையாட்டுப்போட்டி,கலைவிழாவிற்குசெலவிற்கேற்றபடியும் நிதிஅறவிடப்படும்.

ஏனைய செலவுகள் பெற்றோரிடமிருந்துகிடைக்கும் நிதியில் மேற்க்கொள்ளப்படும்.

Back To Top