சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70 ஆண்டுகள் நிறைவு விழா
சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் 70 ஆண்டுகள் நிறைவு விழா 03.12.2022 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு சங்கத்தின் தலைவர் மருத்துவர் ப.சத்தியநாதன் அவர்களின் தலைமையில் கந்தசுவாமி கோயிலில் இருந்து சமய,கலாசார ஊர்லத்துடன் ஆரம்பமாகியது.
இவ் ஊர்வலத்தில் விருந்தினர்கள் மற்றும் பாலர் பாடசாலை சிறார்கள், சமய பெரியார்கள் மற்றும் இந்துமத கடவுள்களின் வேடம் தரித்து அணிவகுத்தனர் இவர்கள் மங்கல வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டனர்.
இவ் நிகழ்வில் அமரர் க.ந.பாலச்சந்திரன் அவர்களின் நினைவாக கிடைக்கப்பெற்ற குடி நீர் சுத்திகரிப்பு இயந்திரத்தின் மூலம் இலவச குடி நீர் சேவையினை செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் கலை நிகழ்வுகள் மற்றும் சிறப்புரைகளும் சங்க கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் விழா சிறப்புற நிதி பங்களிப்பச் செய்த வவுனியா வாழ் வர்த்தகர்கள்;, வாழ்த்துகள் தெரிவித்தவர்கள் மற்றும் பங்குபற்றியவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள்.