கோவிட் -19 செயற் திட்டம் -04
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் அண்மைக் கால மனிதாபிமான செயற்பாடுகளை கேள்வியுற்ற மெல்போண் அவுஸ்ரேலியாவில் வதியும் உறவுகள் காவ்யா யாதவன், இலக்கியன் யாதவன் கிஷான் இராஐசேகரம் சுகன்யா விஷ்ணுராஐ; சுலக்ஷன் விஷ்ணுராஐ ஆகியோர் ரூபா 369,700.00 னை கோவிட் -19 பெரும் தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கோரி சங்கத்திற்கு வழங்கியிருந்தனர்.
இவர்களின் நிதி பங்களிப்பில் கோவில்குளம், சமணங்குளம், சின்னபதுக்களம், பனிக்கர்புளியங்குளம், ஆச்சிபுரம், கற்குளம், வன்னியர் கோட்டம், விநாயகர்புரம் சாஸ்திரி கூழாங்குளம் தேக்கம் தோட்டம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 155 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஆவர்களில் பெண் தலைமை தாங்கும் குடும்பம், மபற்று திறனாளிகள் உள்ள குடும்பம், அதிக குடும்ப அங்கத்தவர்களை கொண்ட குடும்பம், வயது முதிர்ந்தவர்கள் என கிரமங்களில் உள்ள சமூக நலனில் அக்கறையுடன் செயற்படும் உறுப்பினர்களின் சிபார்சின் பெயரில் கிராமங்களுக்கு நேரடியாக சென்று வழங்கிவைக்கப்பட்டது.
புலம் பெயர் தேசத்தில் வாழ்ந்தாலும் தாயக மக்களின் துயரினை துடைக்க நிதியுதவி வழங்கிய நல்லுள்ளங்களுக்கு சு.இ.இ. சங்கம் தனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறது.